search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சன்சாத் ரத்னா விருது"

    சென்னையில் சன்சாத் ரத்னா விருது வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், எம்பிக்கள் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். #SansadRatnaAwards #BanwarilalPurohit
    சென்னை:   

    பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் எம்பிக்களை கவுரவிக்கும் வகையில், சென்னையைச் சேர்ந்த பிரைம் பாயின்ட் பவுண்டேசன், பிரசன்ஸ் இ மேகசின் சார்பில் ‘சன்சாத் ரத்னா விருதுகள்’ வழங்கப்படுகின்றன.

    இந்த ஆண்டுக்கான சன்சாத் ரத்னா விருது வழங்கும் விழா, சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு சன்சாத் ரத்னா விருதுகளை வழங்கினார்.

    மக்களவையின் 9 எம்பிக்கள் மற்றும் ஒரு நிலைக்குழு உறுப்பினர் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோர் இந்த விருதுகளை பெற்றனர். அப்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:

    எம்.பி.க்கள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சொகுசு காரில் செல்ல வேண்டும் என்பது அவசியமல்ல. நான் எம்.பி.யாக இருந்தபோது, சிறிய காரில்தான் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தேன். எளிமையாக இருந்து சேவையாற்ற வேண்டும்.

    அமெரிக்காவில் செனட் உறுப்பினர்கள், சொந்த பிரச்சினைகளை பேசாமல், கொள்கைகளை உருவாக்குவது போல,  இந்தியாவிலும்  நாடாளுமன்றத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

    அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்ல உறுப்பினர்கள் பாடுபட வேண்டும். எம்.பி.க்கள் தங்களது தொகுதி மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்தார். #SansadRatnaAwards #BanwarilalPurohit
    பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட 12 எம்பிக்களுக்கு சன்சாத் ரத்னா விருதுகளை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்க உள்ளார். #SansadRatnaAwards #BanwarilalPurohit
    சென்னை:

    பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் எம்பிக்களை கவுரவிக்கும் வகையில், சென்னையைச் சேர்ந்த பிரைம் பாயின்ட் பவுண்டேசன், பிரசன்ஸ் இ மேகசின் சார்பில் ‘சன்சாத் ரத்னா விருதுகள்’ வழங்கப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சன்சாத் ரத்னா விருது வழங்கும் விழா, சென்னை ஆளுநர் மாளிகையில் நாளை மறுதினம் (ஜனவரி 19) நடைபெற உள்ளது.

    கோப்புப்படம்

    விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு சன்சாத் ரத்னா விருதுகளை வழங்க உள்ளார். விழாவில் மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆஹிர், பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

    மக்களவையின் 9 எம்பிக்கள், மக்களவையின் ஒரு நிலைக்குழு உறுப்பினர் மற்றும் இரண்டு ஓய்வு பெற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த விருதுகளை பெற உள்ளனர். மக்களவை செயலகம் மற்றும் பிஆர்எஸ் சட்டமன்ற ஆய்வு நிறுவனம் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் விருதுக்கான எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். #SansadRatnaAwards #BanwarilalPurohit
    ×